பழைய மாணவரும்,இலங்கை மலையக மன்றத்தின் தலைவரும்,தொழிலதிபருமான திரு.சிவன் ரவிசங்கர் அவர்களின்,தெல்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின்,வைர விழாவிற்கான வாழ்த்துச் செய்தி

0
353

மலர்ந்திரக்கும் இந்நாளில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதியான இன்று வைர விழா காணும் மலைமகள் இந்து மத்திய கல்லூரிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட எமது தெல்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின் வளரச்சிக்காக உறுதுணையாய் நின்றுழைத்து,இன்று மாபெரும் விருட்சமாக வளர்ந்து செழித்து நிற்கும் பாடசாலைக்கு,தமது நன்கொடைகளை வழங்கி உதவிய அமரர் கருப்பையாபிள்ளை ஐயா அவர்களையும் மற்றும் வெற்றிக்காக உழைத்த அதிபர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,நலன்விரும்பிகள் என அனைவருக்கும் இந்த நல்ல பொழுதில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பாடசாலையின் வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி பல மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைத்த,பெருமதிப்பிற்குரிய முன்னால் அதிபர் எஸ்.கணேஷமூர்த்தி ஐயா அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

மலைமகள் இந்து மத்திய கல்லூரி இன்னும் பல நூறு ஆண்டுகள் தலைதோங்கி எமது சமூகத்தின் எழுச்சிக்காகவும்,விடிவிற்காகவும் உழைக்க எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்,எமது பாடசாலையின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் தற்போதைய பாடசாலை அதிபர் திரு.ரொமேஷ் ஐயா அவர்களுக்கும்,சக ஆசிரியர்களுக்கும்,மாணவ செல்வங்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.