கொரோனா தொற்றுடன் 1,633 பேர் அடையாளம்

0
255

இன்றைய தினம்(12) கொரோனா தொற்றுடன் 1,633 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 220,556 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம்(12) கொரோனா தொற்றிலிருந்து 2,426 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் அதன்படி நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186,516 ஆக அதிகரித்துள்ளது.