எமது மக்களில் பெரும்பாலானோர் தொழில் நிமித்தம் கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கின்ற நிலையில்இ தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் ‘நிரந்த வதிவிடத்திலேயே கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற விதி நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுகிறது. மாகாண எல்லைகள் மூடப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தமது சொந்த இடங்களுக்கு பயணித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வதென்பது முடியாத காரியமாகும்.
இது தொடர்பாக இலங்கை மலையக மன்றத்தின் தலைவர் சிவன் ரவிசங்கர் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் மற்றும் கொரோன கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுடனும் பேசினேன். ஆனால் அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக,பொதுசுகாதார அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் திரு. மகேஷ் பாலசூரியவுடனும் தொடர்புகொண்டு வினவினேன். இதற்கு பதிலளித்த அவர் இது மிகவும் பாராதூரமான நடைமுறை பிரச்சினை எனவும்,ஆனால் இதற்கு தகுந்த நடிவடிக்கைகளை பொறுப்பில் உள்ளவர்கள் எடுக்க தவறியிருப்பதாக தெரிவித்தார். அத்துடன் இது பற்றி அனைத்து உயர்மட்ட தரப்பினரும் அறிந்திருக்கின்ற நிலையில், பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றுமாறு உத்தரவிட தயங்குகின்றனர்,முடிந்த வரை இந்தப்பிரச்சினைக்கு தீர்வுகளை பெறமுயற்சித்தும்,இதுவரை தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
எனவேஇ இந்தப் பிரச்சினை தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு,பொறுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டி அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நேரடியாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவைத்தேன்.
இந்த பிரச்சினையை தொடர்பாக ஆராய்ந்து, எமது மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
‘மாற்றத்திற்காகவும்இ பொறுப்பான வளர்ச்சிக்காகவும் எழுச்சிபெறும் மலையகம்.’





