இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 24 மஞ்சள் மூடைகளை, கல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் வாகனத்தில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த சந்தர்ப்பத்தில்,கடற்படையினர் குறித்த மஞ்சள் மூடைகளை இன்று(17) காலை வேளையில் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 24 மஞ்சள் மூடைகள் 860 கிலோவினை கொண்டது எனவும் இதன் பெறுமதி ரூபாய் 26 லட்சம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,அவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மஞ்சள் மூடைகளை ஏற்றுவதற்கு பயன்படுத்திய போல்ரோ ஜீப் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன்,அதனையும் மஞ்சள் மூடைகளையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





