கொரோனா தொற்று காரணமாக பதிவான மொத்த மரணங்கள் 2,425 ஆக அதிகரிப்பு

0
334

கொரோனா தொற்று காரணமாக முந்தைய நாள்(16) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம்(17) உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 31 ஆண்களும் 20 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் 37 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் 14 பேர் 30 – 59 வயதிற்கு இடைப்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.