கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றதா???

0
431

கோழிகளின் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணத்தால் கோழி இறைச்சியை கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க முடியாது என கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ மக்காச் சோளத்தின் விலை 55 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் கோழி உற்பத்தி செலவில் 70 சதவீதம் அவைகளின் உணவிற்கு செலவிடப்படுவதாக கோழி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

மக்காச் சோளம் இறக்குமதிகளை தடை செய்தல் மற்றும் கோதுமை விதைகளின் இறக்குமதியை பெரிய அளவிலான இறக்குமதியாளர்களுக்கு மாத்திரம் வழங்குதல் போன்ற பிரச்சினைகள் காரணமாக விலங்குகளின் உணவு விலை அதிகரிப்பிற்கு காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.