கடுமையான நிபந்தனைகளுடன் 21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வு

0
727

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பயணக்கட்டுப்பாடானது மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணியில் இருந்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் கூறியதையடுத்து மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் ஒன்று கூடுதல்,விழாக்களை நடாத்துதல் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் மற்றும் காலி முகத்திடல் போன்ற பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்று கூடுதல் முற்றாக தடை விதிதக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் மூன்று நாட்களுக்கு,அரச ஊழியர்கள் தங்களது கடமைகளை ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.