பட்டதாரி பயிற்சியாளர்கள் 18 ஆயிரம் பேரை தொலைதூர பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளின் நிமித்தம் அரச சேவைகள் அமைச்சு கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்த திட்டத்திற்கு அமைய மேற்குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆசிரியர் பற்றாக்குறையாக காணப்படும் தொலைதூர பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.





