பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்தாலும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மாகாண மட்டங்களில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அவர் அது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது, “கொவிட் கட்டுப்பாட்டு குழுவின் பிரதானி எங்களுக்கு அறிவித்துள்ளார் மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடுகள் காணப்படுகின்றது என்று.அதனால் மாகாணங்களுக்கிடையில் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இயங்கக் கூடாது என்று.நாங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பார்ப்போம் திங்கட்கிழமை தொடக்கம் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் ரயில் சிலவற்றையும் பஸ் சிலவற்றையும் மாகாணங்களுக்கிடையில் இயக்குவதற்கு அனுமதி கிடைக்கின்றதா என பார்ப்போம்.அப்படி அனுமதி கிடைத்தால் நாங்கள் மாகாணங்களுக்கிடையில் பஸ் மற்றும் ரயில் சேவைகளை இயக்குவோம்.அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையென்றால் மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து இயக்கப்படாது” என தெரிவித்துள்ளார்.





