அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை,இன்று குறைக்கப்படுமா???

0
335

கடந்த ஜுன் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தது.

இருப்பினும் இவ்வாறு அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை,இன்று குறைக்கப்படுவதற்கான சாத்தியகூறு காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையானது நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ துபாயிலிருந்து எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 இலக்க விமானத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.அவர் நாட்டிற்கு வருகை தந்ததும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என ஆளுங்கட்சியினர் தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.