கொரோனா தொற்று காரணமாக மேலும் 43 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 43 உயிரிழப்புக்களும் நேற்றைய தினம்(25) நிகழ்ந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.
அந்த உயிரிழப்புக்களில் 18 பேர் பெண்கள் எனவும் ஏனைய 25 பேரும் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





