மொரவக்க கொஸ்நில்கொடை அரச வைத்தியசாலையில் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மையத்திற்குள் உள்நுழைந்த பித்துப்பிடித்த நாய் ஒன்று,மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 3 பெண்களை கடித்துள்ளதுடன்,அந்த மையத்தில் குழப்பநிலை தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாய் நோயளர்களின் படுக்கையில் பாய்ந்துள்ளதுடன்,அந்த பயத்தில் நோயாளர்கள் கூச்சலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சிகிச்சை மையத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 18 பேர் உட்பட 38 பேர் சிகிச்சைப் பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் சிகிச்சைகளை முடித்து,வீட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும் வைத்தியசாலையின் சேவையாளர்கள் மற்றும் சிகிச்சைப் பெற்று வரும் குடும்ப உறுப்பினர்கள் சிலரினால்,கடும் பிரயத்தனத்திற்கு மத்தியல் நாயை வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் நாய் வீதிக்கு சென்றவுடன் சிலர் நாயை அடித்து கொலை செய்துள்ளனர்.
மேலும் குறித்த பித்துப்பிடித்த நாய் வைத்தியசாலைக்குள் நுழைவதை எவரும் காணவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.





