வீரியமிக்க இந்திய டெல்டா வைரஸ் தொற்றுடன் மற்றொரு நபர் கஹதுடுவ ஜயலிகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக பத்மராஜா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான நபர் 47 வயதுடையவர் எனவும் அவர் பொலன்னறுவை கொவிட் சிகிச்சை மையத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தொற்றாளரின் அம்மா மற்றும் மனைவி,மகன் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றாளரின் வீடு அமைந்துள்ள இடத்திற்கு செல்லும் வீதியை முடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும்,குறித்த பிரதேசத்தில் 100 பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தனுக பத்மராஜா தெரிவித்துள்ளார்.





