முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றி வந்த 22 வயதுடைய சிறுமியை இரண்டு தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ரிஷாத் பதியுதினின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரிதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சிரின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுதி தொடர்பாக, அதற்கு முன்னதாக அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்து 22 வயது மற்றும் 32 வயதுகளுடைய பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,குறித்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றி வந்த டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரின் மனைவி,மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.





