இன்றைய தினம்(24) கொரோனா தொற்றுடன் 1,707 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்னடினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,820 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம்(23) கொரோனா தொற்று காரணமாக 52 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4054 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 26 ஆண்கள் எனவும் 26 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இவர்களில் 39 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் 12 பேர் 30-59 வயதிற்கு இடைப்பட்டவர்கள் மற்றும் 30 வயதிற்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





