சிரச,சக்தி வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் இன்று(25) அதிகாலை வேளையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து காலமாகியுள்ளார்.
அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஊடகத் துறையில் சிறந்த சேவையாற்றிய அவர் இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





