இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயற்சி செய்த 4 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த 4 பேர் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைதாகியுள்ளதாகவும்,அவர்களில் 3 பேர் இந்திய பிரஜைகள் எனவும் மற்றொருவர் அல்லைப்பிட்டியவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று பரவலை கருத்திற் கொண்டு 4 சந்தேக நபர்களையும் காரைநகர் இடை தங்கல் முகாமில் தங்க வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





