டெல்டா வைரஸ் தொற்றானது இனிவரும் காலங்களில் நாட்டில் பிரதான வைரஸ் திரிபாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதனால் பயணக்கட்டுப்பாடு தளர்வுகளின் போது பொது மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பில் மீள் பரிசீலனைகளை மேற்கொள்ளுமாறு விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதற்கமைய பொது மக்கள் ஒன்று கூடும் எண்ணிக்கையை 50 இற்கும் 60 இற்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும்,இல்லையெனில் தற்போது காணப்படுகின்ற எண்ணிக்கையை விட குறைந்த மட்டத்தில் அந்த எண்ணிக்கை அமைய வேண்டும் என விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.





