இன்று காலை 6 மணி தொடக்கம் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுலந்தல தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பிபுர பகுதி,அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு,கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்போவில் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கரதியான வத்தை ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.





