பேருந்திற்காக காத்திருந்த நபர் ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழப்பு..!

0
231

எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(27) மாலை பதிவாகியுள்ளது.

எத்கதுர திவிதுர பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு சென்று பின்னர் வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு வருகை தந்து பேருந்திற்காக காத்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் எல்பிட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இருப்பினும் முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.