அரச சேவையாளர்களின் நலன் கருதியே மீள மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிப்பு – போக்குவரத்து அமைச்சர்

0
334

நாளை முதல் மீண்டும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம கருத்து தெரிவித்துள்ளதாவது, “நாளைய மறுதினம் அரச சேவையாளர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.அதன் காரணமாக அவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக நாளை முதல் மீண்டும் மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து தொடங்கப்படுகின்றது.இருப்பினும் காலை மற்றும் மாலை வேளைகளில் மாத்திரம் போக்குவரத்துக்கள் இடம்பெறும்.இடைப்பட்ட வேளைகளில் போக்குவரத்து இடம்பெறமாட்டாது.காரணம் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் குறையவில்லை.வேலைக்கு செல்லும் பணியாளர்களின் தேவை கருதியே மீள போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளோம்.பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் கட்டாயம் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளளோம்.இது தொடர்பாக தனியார் பொது போக்குவரத்திற்கும் அறிவித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.