500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 17 உடன் பெண்ணொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு சுகந்திபுரம் கொலணி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது போலி நாணயத்தாள் தொகையுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் விசேட காரியாலயத்தின் அதிகாரிகளால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,கைது செய்யப்பட்ட பெண் 41 வயதுடைய சுகந்திபுரம் உதயார்கட்டு பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட பெண் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





