தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் வைத்தியசாலைகளில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நோயாளர்களுக்கு தேவையான ஒக்ஸிஜன்களை இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தகையதொரு பேரழிவு நிலை எழுந்துள்ள தற்சமயத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முறையற்றது எனவும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி அரசாங்கத்தின் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அனைத்து ஆசிரியர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுகளில் முகக் கவசங்கள் அணியாமை போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றாமையே கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பிற்கு பிரதான காரணம் என சுகாதார பிரிவு அடையாளப்படுத்தியுள்ளதாகவும்,இவ்வாறான நடவடிக்கைகளில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.





