கடவுச்சீட்டை பெற காத்திருப்பவர்களுக்கான செய்தி!!!

0
379

வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற காத்திருப்போருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய சாதரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறையை நாளை(06) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்ரமுல்லையில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவசர தேவைகளுக்காக மாத்திரம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் பீ.ஜி.ஜி.நளிந்த அவர்கள் தெரிவித்துள்ளார்.