
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூரிவுகுறப்பட்டுள்ளது
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், மழை பெய்யக் கூடும் என எதிர்பாக்கப்படுகிறது
அத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பாக்கபடுகிறது.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைதீவு மாவட்டத்தின் சில இடங்களிலும், மாலை / இரவு வேளைகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
அத்துடன் சில மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை வேகத்தில் காற்று வீசும் என எதிர்பாக்கபடுகிறது
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.





