பாடசாலைகள் மீள திறக்கப்படாது!!!

0
409

தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு பாடசாலைகள் செப்படம்பர் முதல் வாரத்தில் மீள திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒன்லைன் கல்வி முறைமையினை வழங்குவது மிகவும் அவசியமானது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு மேற்குறித்து தெரிவித்துள்ளார்.