அடுத்த 2 வாரங்களுக்கு நாம் என்ன செய்தாலும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கக் கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே சுகாதார பிரிவு நோயளர்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அடுத்து 14 நாட்களுக்கு நாம் என்ன செய்தாலும் தொற்றாளர்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கக்கூடும்.எனவே வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைப்பு தொற்றாளர்களின் அதிகரிப்பை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும்.அனைத்து சமூக கூட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும்.மாவட்டம் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாட்டை அமுல்ப்படுத்த வேண்டும்.அதே போன்று நிறுவனங்களின் ஊழியர்களின் வருகையை குறைக்க வேண்டும்.தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் அது பேரழிவிற்கு எடுத்துச் செல்லும்.நாங்கள் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாமதமாதிக்கும் ஒவ்வொரு கணமும்,ஒவ்வொரு உயிரை இழக்க நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.





