கொரோனா தொற்றின் அவதானம் காரணமாக 3 நகரங்களின் அனைத்து கடைகளும் மூடல்!!!

0
292

கொரோனா தொற்றின் அவதானம் காரணமாக பிரதான முக்கிய 3 நகரங்களில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மாத்தளை நகரத்தின் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம்(12) உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் அங்குள்ள கடைகளை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கந்தளை சேருநுவர பிரதேசத்தில் உள்ள கடைகளை 14 நாட்களுக்கு மூடுவதற்கு தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ஊவா பரணகம பிரதேசத்தின் லுணுவத்தை பிரதேசத்தில் உள்ள கடைகள் இன்று(13) தொடக்கம் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக லுணுவத்தை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.