கோவிட் நிதியத்துக்கு தனது சம்பளத்தை வழங்கிய முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினராகினார் அங்கஜன் இராமநாதன்

0
465

கொவிட் நிதியத்திற்கு தனது ஒருமாத சம்பளத்திணை அங்கஜன் இராமநாதன் பங்களிப்பு செய்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது.

கொவிட் நிதியத்திற்கான எனது பங்களிப்பு மனதிற்கு நிம்மதியையும் ,புது உத்வேகத்தையும் அளிக்கின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதில் ஓர் அங்கமாக பொருளாதார பிரச்சனை காணப்படுகிறது.

இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14பேரும் எமது ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க ஏகமனதாக தீர்மானித்திருந்தோம்.

அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் இருந்து கொவிட் நிதியத்திற்கு பங்களிப்பை ஆற்றிய முதல் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் பெருமிதமடைகிறேன்.

இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக எத்தனையோ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. அவ்வாறான குடும்பங்களுக்கு அரசாங்கம் இரண்டாயிரம் ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் எனது அன்பளிப்பு நிதியும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மற்றும் கொவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பயன்படப்போவதனை இட்டு பெருமகிழ்வடைகின்றேன்.

இக்கட்டான தருணத்தில் ஒருவருக்கு செய்யும் உதவி எமது மனதிற்கு புத்துணர்ச்சியையும்,புது உத்வேகத்தையும் அளிக்கும்.