ஊரடங்கு நடைமுறையில் உள்ள போது வவுனியாவில் வெளியே நடமாடியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

0
447

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள போது வவுனியா மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இன்று(23) கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.அதன்போது வெளியே நடமாடியவர்களுக்கு என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய 38 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் ஆச்சிபுரம் தரணிக்குளம் மதவாச்சி மடுகந்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கொவிட் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஏனையவர்கள் எச்சரிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.