இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!!!

0
502

இன்றைய தினம்(01) நாடளாவிய ரீதியில் 491 மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.

அதன்படி பின்வரும் இடங்களில் பொது மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு முன்னதாக பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

அத்துடன் குறித்த பட்டியல் சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்படும் அதிகாரபூர்வ பட்டியலாகும்.

எவ்வாறிருப்பினும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரியை அணுகி,சம்பந்தப்பட்ட இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.