பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானம்!

0
238

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சில் இன்று(15) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல தெரிவித்துள்ளார்.

அங்கு முன்பள்ளி உட்பட 1 ஆம் தரம் தெடக்கம் 6 ஆம் தரம் வரையான வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“முன்பள்ளி உட்பட 1 தொடக்கம் 6 வரையான வகுப்புக்களை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.சுகாதார பிரிவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அடுத்து இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுகள் எடுக்கப்படும்.200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட 5000 பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.”