இன்றும் பொரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை!!!

0
223

மேல்,சப்ரகமுவ,மத்திய,வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி,மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 75 மி.மீ வரை கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய இடங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக வலுவான காற்று வீசக் கூடும் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.