மேல்மாகாணத்தில் நேற்றைய தினம்(02) காலை 6 மணிதொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 1,156 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 531 பேரும்,பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 54 பேரும், ஊழல் குற்றங்களுடன் தொடர்புடைய 491 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.





