சிலரிடம் போலியான தடுப்பூசி அட்டைகள் காணப்படுகின்றது : தடுப்பூசி அட்டைகளின் செல்லுபடியை ஆராய நடவடிக்கை

0
258

போலியான தடுப்பூசி அட்டைகள் சிலரிடம் காணப்படுவதாகவும் அதன் காரணத்தினால் தடுப்பூசிகளின் செல்லுபடியை ஆராய கொவிட் அடக்குமுறை பணிக்குழு முடிவு செய்துள்ளது.

பிரதேச செயலகங்கள் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மட்டத்தில் இது குறித்து ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கொவிட் அடக்குமுறை பணிக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை 01 ஆம் திகதி கூடியது.

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் முடிவை மேலும் தாமதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம் தடுப்பூசி தொடர்பாக சரியான தரவை தொகுக்க போதுமான காலம் தேவை என்பதை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமையாகும்.