உலகம் முழுவதிலுமாக செயலிழந்து காணப்பட்ட பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸப் ஆகிய சேவைகள் தற்போது மீள செயற்படுகின்றன.
அதன் பிரதான சேவையகங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு(04) குறித்த செயலிகள் செயலிழந்தன.
சுமார் 6 மணிநேரமாக நிறுத்தப்பட்ட குறித்த செயலிகள் தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றது.
பேஸ்புக்கில் கடைசியாக இதுபோன்று கோளாறு கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.





