பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய தென் மாகாணம் மற்றும் பன்னிப்பிட்டிய,தெஹிவலை,இரத்மலானை,ஹொரணை,மத்துகம மற்றும் அம்பலங்கொடை மின்சார விநியோக துணை நிலையம் மூலம் மின்சாரம் வழங்கும் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





