நுவரெலியா ராகலவத்தையில் இடம்பெற்ற தீ விபத்தில் 5 பேர் பலி : பலியானவர்களில் 2 குழந்தைகளும் உள்ளடங்குவர்

0
315

நுவரெலியா ராகலவத்தை மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு(07) ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு ஆண்களும்,ஒரு பெண்ணும் மற்றும் 11 வயதுடைய ஆண் சிறுவன் ஒருவரும்,ஒரு வயதுடைய ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்,சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்,மாஜிஸ்திரேட் விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.