20-29 வயதுக்குட்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி!

0
297

20 – 29 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது நாளைய மறுநாள்(11) தொடக்கம் ஒக்டோம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள எந்தவொரு அரச பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் தங்களுடைய அடையாள அட்டையினை காண்பித்து யாழ் பல்கலைக்கழகத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் கல்விசாரா ஊழியர்களில் எவருக்கேனும் மருந்துகளுக்கு ஒவ்வாமை காணப்பட்டால் அவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 16 திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,தெல்லிப்பளை,சாவகச்சேரி,பருத்தித்துறை,ஊர்காவற்துறை ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் தடுப்பூசி செலுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வாமை நிலைமைகள் இருப்பாதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்படாது திருப்பி அனுப்பட்டவர்கள்,பல்கலைக்கழக தடுப்பூசி செலுத்தும் மையத்தில் உள்ள வைத்தியரிடம் பரிந்துரை கடிதத்தை பெற்று மேற்குறித்த ஏதேனும் ஒரு வைத்தியசாலையில் கடிதத்தை காண்பித்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள முடியும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.