இந்திய இராணுவத் தளபதி இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார்!

0
219

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நாரவன அவர்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை(12) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்திய தளபதியுடன் மேலும் நான்கு மூத்த அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.இவர்கள் இன்று(12) காலை 11.05 மணியளவில் இந்தியாhவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான 122 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தளபதியுடன் வருகை தந்த குழுவினரை வரவேற்பதற்காக இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை வந்துள்ளார்.

மேலும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நாரவன அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.