கடந்த வியாழக்கிழமை அன்று நீர்வெலி பூதர்மடம் பிரதேசத்தில் ஒரு குழுவொன்று வீடொன்றிற்குள் நுழைந்து வாள்வெட்டுக்களை நடத்தி வீட்டின் உடைமைகளை சேதப்படுத்தி வயோதிபர் ஒருவரை தாக்கி தப்பி சென்றிருந்தது.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.அத்துடன் அவர்களிடம் இருந்த முச்சக்கர வண்டியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்வெலி,அரியாலை-நாயன்மார்கட்டு ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாள்வெட்டு சம்பவத்தில் 11 பேர் இணைந்திருந்தனர் எனவும் ஏனைய 9 சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





