தடுப்பூசிகளின் பாதுகாப்பை உடைக்கக்கூடிய ஒரு புதிய கொவிட் திரிபு!

0
361

உலகில் பல நாடுகளில் தற்போது அவதானம் செலுத்தப்படுகின்ற A30 எனும் கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் அவதானம் செலுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வுகள் மற்றும் மரண சடங்குகளில் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றாத காரணத்தினால் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இந்த புதிய திரிபு குறித்து கண்டுப்பிடிப்பு ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பைஸர் அஸ்ட்ரா செனக்கா உட்பட பிரதான தடுப்பூசிகளில் பெற்றுக் கொள்ளப்படும் பாதுகாப்பை உடைக்கக்கூடிய தன்மை இந்த A30 திரிபுக்கு உண்டு.குறித்த திரபு பரவினால் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என உலகமே அவதானம் செலுத்தி வருகின்றது.இது தொடர்பில் நாங்களும் அவதானத்துடன் உள்ளோம்.அனைத்தும் முடிந்துவிட்டது என்று எண்ணி பொதுமக்கள் செயற்பட்டு வந்தால் இன்னும் 4 வாரங்களில் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.”