மக்களின் வாழ்வாதரத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இன்று(31) அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொவிட் அடக்குமுறை பணிக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய சுமார் 2 மாதகாலம் நடைமுறையில் இருந்த மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று(31) நீக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,நாளை(01) தொடக்கம் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொது இடங்கள்,சந்தைகள்,உணவகங்கள் உட்பட மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்கு உள்நுழையும் போது கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்குதல் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
மொத்த மக்கள் தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும்,மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள் தெரிவித்துள்ளார்.





