வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

0
413

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆ.யேசுதாசன் என்பவர் தலையில் காயங்களுடன் தரணிக்குளம் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை வேளையில் சிலர் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலமொன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல்களை வழங்கினர்.

குறித்த சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட உள்ளது.