கொரோனா தடுப்பூசி 50 வீதமானோருக்கு இலவசமாக வழங்கப்படும்-அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல

0
477

 

இலங்கையில் கொரோனாவை கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதற்காக இந் நாட்டுக்கு கொண்டு வர தயாராக இருக்கும் தடுப்பூசிகள் அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வருமென அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மற்றும் 50 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அத்துடன் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 4 தடுப்பூசி மருந்துகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட முறையில் நடப்பதாகவும் இது குறித்து பொதுமக்களுக்கு எதிர்காலத்தில் விழிப்புணர்வுகள் வழங்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.