
அண்மைக்காலமாக நாட்டில் மோட்டார் வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கல்கிஸ்ஸ,எம்பிலிப்பிட்டிய,குருநாகல்,கட்டுகஸ்தோட்ட,கொஸ்வத்த மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலேயே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதிகளில் மோட்டார் வாகன திருட்டுச்சம்பவமே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் எனவே மோட்டார் வாகன உரிமையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை நிறுத்தி வைக்கும் பொழுது எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மற்றும் வாகனங்கள் திருடப்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.





