போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது

0
268

சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட வந்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பணியகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இருவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் இலங்கை, மாலைத்தீவு, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் எம்.எம்.எம் நவாஸ் மற்றும் அப்நாஸ் ஆகிய இருவரும் என இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்தியுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் தமது அடையாளத்தை மறைத்து வேறு பெயர்களை பயன்படுத்தி பல ஆண்டுகளாக சென்னையில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.