இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள சின்ன இராவணா கோட்டைக் கடற்பரப்பில் லைபீரியா கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இது குறித்து கடற்படை ஊடக செய்தி தொடர்பாளர் இந்திக.டி.சில்வா தெரிவிக்கையில் லைபீரியா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள யூரோ சன் பெயரை கொண்ட கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலானது அபுதாபி துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சீமெந்து ஏற்றி வந்த வேளையில் விபத்துக்குள்ளானதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி குறித்த விபத்துக்குள்ளான இடத்திற்கு இலங்கை கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.





