இன்று முதல் ரயில்சேவைகள் ஆரம்பம்

0
395

குறித்த காலத்திற்கு கொரோனா அச்சநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் வழமையான முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று தொடக்கம் 390 ரயில்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பயணிகள் ரயில் சேவை,அலுவலக ரயில் சேவை,நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை மற்றும் இரவு நேர தபால் சேவை என்பன முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் பின்பற்றி ரயில் பயணங்களில் ஈடுபடுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.