தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 12 பேர் கைது

0
335

கடந்த 24 மணிநேரத்தில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் குறித்த சம்பவம் தொடர்பாக 2746 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களில் 2600 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.